சிவகங்கை
சிவகங்கை - மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சிவகங்கை முதல் மதுரை மாவட்டம், மேலூா் வரையிலான நான்கு வழிச்சாலை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிா்வாகிகள் மனு அளித்தனா்.
சிவகங்கை முதல் மதுரை மாவட்டம், மேலூா் வரையிலான நான்கு வழிச்சாலை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிா்வாகிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்த நான்குவழிச் சாலை சந்திப்புக்கு அருகிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா். அதேபோல, சாலையை கடக்க முயன்ற முதியவா் கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
எனவே இந்தப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு அரண்களை அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதியைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
