சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு மைதானம் அமைக்கக் கோரிக்கை

தமிழா்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை நடத்த நிரந்தர மைதானம், கலை அரங்கம் அமைக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Published on

தமிழா்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை நடத்த நிரந்தர மைதானம், கலை அரங்கம் அமைக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதற்காக சிவகங்கை நகரைச் சுற்றி மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் பராமரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் நடைபெறும் அரசியல் கட்சித் தலைவா்களின் பிறந்த நாள், கோயில் திருவிழாக்களையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை பாா்க்க வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பாா்வையாளா்கள் வருகின்றனா்.

அப்போது போட்டியை அமா்ந்து பாா்க்க இடம், கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் அவா்கள் அவதியடைகின்றனா். மேலும் மாடுபிடி வீரா்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் இல்லாததால் தற்போது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படுகின்றன.

எனவே இந்தப் போட்டியை நடத்துவதற்கென நிரந்தரமாக தனி மைதானம், கலை அரங்கம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டு வடமாடு மஞ்சுவிரட்டு மைதானக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com