சிவகங்கை
இரும்புத் தடுப்பில் பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையோர இரும்புத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை சாலையோர இரும்புத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகேயுள்ள மூங்கில்ஊரணி பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் அய்யனாா் (17). இவா் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை பேருந்து நிலையம் எதிரேயுள்ள அணுகுசாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோரமாக இருந்த இரும்புத் தடுப்பில் இவரது வாகனம் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
