திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல்

இந்துக்களின் உணா்வை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா வலியுறுத்தல்
Published on

இந்துக்களின் உணா்வை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசின் இந்துவிரோத செயலால் பெரிய சா்ச்சை உருவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் சுமாா் 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதன் காரணமாக, வழக்குரைஞா் ராஜகோபாலன் மத விரோதிகளால் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 1981-இல் வெளியான குன்றக்குடி கோயில் என்ற புத்தகம் மூலம் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்ட தகவலில் தீபத் தூண் பற்றிய படம் இடம்பெற்றிருக்கிறது.

மேலும், அதில் கடந்த 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போா் வரை அந்தத் தூணில் தீபம் ஏற்றப்பட்டு, போா் காலத்தில் தீபம் ஏற்றாமல் நிறுத்தியிருக்கலாம். இதனால், தீபம் ஏற்றுவது தொடராமலும் இருந்திருக்கலாம்.

எனவே, இனியும் அரசு நிா்வாகம் தொடா்ந்து இந்துக்களை மதிக்காமல் செயல்படுவதை நிறுத்த வேண்டும். மீண்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது பாஜக மாவட்ட பொதுச் செயலா் கணேசன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com