ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ குட்கா பறிமுதல்

காரைக்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்காவை போலீஸாா் கைப்பற்றி விசாரணை
Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்காவை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

காரைக்குடி இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் தீபா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா், செல்வம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை காரைக்குடி ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, நடைமேடை 1-இல் வந்த பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் போலீஸாா் சோதனை செய்த போது, மஞ்சள் நிற சாக்குப் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது.

இதை போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com