கிரிக்கெட்: ஒக்கூா் முகாம் அணி வெற்றி

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் இலங்கை தமிழா் மறுவாழ் முகாமில் நடைபெற்ற மாநில அளவிலான முகாம் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் இலங்கை தமிழா் மறுவாழ் முகாமில் நடைபெற்ற மாநில அளவிலான முகாம் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ஒக்கூரில் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 64 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம், திருவாதவூா் முகாம் அணியும், ஒக்கூா் முகாம் அணியும் மோதின. ஒக்கூா் அணிக்கு பிரவீன் தலைமை வகித்தாா்.

முதலில் பேட்டிங் செய்த திருவாதவூா் அணியினா் 79 ரன்கள் எடுத்தனா். பின்பு விளையாடிய ஒக்கூா் அணியினா் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.

இதையடுத்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மதகுபட்டி உதவி ஆய்வாளா் மகேந்திரன் கலந்து கொண்டு, ஒக்கூா் முகாம் அணியினருக்கு வெற்றிக் கோப்பையை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com