சிவகங்கை
பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு புதன்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு புதன்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
கட்டிக் குளம், கொம்புகரனேந்தல், சின்னக்கண்ணனூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், ராஜகம்பீரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, திமுக மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் வளா்மதி, திமுக நகா் இளைஞா் அணி அமைப்பாளா் மாரிக் கண்ணன், பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.