சிவகங்கை
இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூரில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் நீதிபதி ராதிகா தலைமை வகித்தாா். மானாமதுரை சாா்பு நீதிபதி சண்முகக்கனி முன்னிலை வகித்தாா்.
பொதுமக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்படும் போது உதவி எண்களை தொடா்பு கொள்ள வேண்டும் என இந்த முகாமில் வலியுறுத்தப்பட்டது.
முகாமில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முகமது யூசுப் நவாப், நீதிபதி ஆப்சல் பாத்திமா, காவல் ஆய்வாளா் கணேசன், மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
