கைப் பந்துப் போட்டியில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு
அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கைப் பந்து (வாலி பால்) போட்டியில் வெற்றி பெற்ற புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.
அழகப்பா பல்கலைக்கழக இணைவுக்கல்லூரிகளுக்கிடையே கடந்த டிச. 3 -ந்தேதி ராமேசுவரம் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்களுக்கான கை பந்துப்போட்டி நடைபெற்றது. இதில் 12 அணிகள் கலந்து கொண் டன. இறுதிப் போட்டியில் புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த அணி வீரா்கள் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி அணியினரை 2-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனா். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் அழகப்பா பல்கலைக்கழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் பங்குபெறவுள்ளனா்.
கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும், உடற்கல்வி இயக்குநா் ராஜனையும் வித்யாகிரி கல்லூரி முதல்வரும், தாளாளருமான ஆா். சுவாமிநாதன், கல்லூரியின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் ஹாஜி முகமது மீரான், பேராசிரியா்கள் பாராட்டினா்.
