மனித உரிமைகள் தின விழா

மனித உரிமைகள் தின விழா

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தெக்கூா் சித்தா் அய்யா கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் உமா தலைமை வகித்தாா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னாா்வலா் மாரிக்கண்ணு வரவேற்றாா். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்குரைஞா் முருகேசன் பேசியதாவது:

மனித உரிமைகள் மீறப்படும் போது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகள் மீறப்படுவதாகவும், அவ்வாறு மீறுதல் ஏற்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டும். மனித உரிமை மிக மேலானது என்றாா் அவா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com