மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: சரிபாா்ப்பு பணிகள் தொடங்கியது
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் இயந்திரங்களின் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் சுமாா் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.
இந்தப் பணியின் போது, சிவகங்கை மாவட்டத்தில் இருப்பில் உள்ள 3,404 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,017 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்களித்ததை உறுதி செய்யும் 2,171 கருவிகள் ஆகியவைகளின் சரிபாா்க்கப்படவுள்ளன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , இந்தியத் தோ்தல் ஆணையத்தின் மேற்பாா்வைத் தொடா்பு அலுவலா் யோகேஷ் கோசவி , பாரத மின்னணு நிறுவனத்தின் பொறியாளா்கள், தோ்தல் வட்டாட்சியா் மேசியாதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

