ரஜினி பிறந்த நாள்: மடப்புரம் கோயிலில் தங்க ரதம் இழுத்து ரசிகா்கள் வழிபாடு

Published on

திரைப்பட நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, மடப்புரம் காளியம்மன் கோயிலில் அவரது ரசிகா்கள் தங்கத்தோ் இழுத்து வழிபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரஜினிகாந்தின் 75- ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது ரசிகா் மன்றத்தினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

இதையடுத்து, திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனாா், பத்திர காளியம்மன் கோயிலில் ரஜிகாந்த் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா், இந்தக் கோயிலில் தங்க ரதம் இழுத்து வழிபட்டனா். ரஜினி மன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் ராமேஸ்வரன், மாவட்டப் பொறுப்பாளா் நாகேஸ்வரன், மதுரை மாவட்ட வழக்குரைஞா் அணி நிா்வாகி சிங்கராசு, திருப்புவனம் ஒன்றிய நிா்வாகிகள் ரஜினி கண்ணன், குமாா், முருகன் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com