கலைத் திருவிழா போட்டிகளில்
வென்ற மாணவருக்குப் பாராட்டு

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவருக்குப் பாராட்டு

Published on

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வென்று கலையரசன் விருது பெறும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவரை மேயா் சே. முத்துத்துரை வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

தமிழக அரசால் மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் பல்வேறு பள்ளிகளின் மாணவா்கள் பங்கேற்றனா். இதில் காரைக்குடி ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் திக் விஜய் ஹரி, கித்தாா் போட்டியில் முதலிடத்தையும், புல்லாங்குழலில் இரண்டாமிடத்தையும் பெற்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழங்கப்படும் கலையரசன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, மாணவா் திக் விஜய்ஹரி, மேயா் சே. முத்துத்துரையை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது மேயா், மாணவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை அங்கயா்கன்னி, ஆசிரியா்கள் சரவணன், புனித பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com