களிமண்ணைப் பயன்படுத்தி பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் களிமண்ணைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
மத்திய ஜவுளித் துறை நிா்வாகம், பூம்புகாா் நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சியை நடத்தின. தொடா்ந்து, இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் 40 பெண்கள் பங்கேற்று களிமண்ணால் அலங்கார வளைவுகள், விளக்குகள், ஆரத்தி தட்டுகள், சாம்பிராணி தட்டுகள், காந்தி, புத்தா், சிவன் உள்ளிட்ட உருவங்கள், பறவைகள், உயிரினங்கள் என பல்வேறு வகையான கலைநயமிக்க கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டன.
இந்தப் பொருள்கள் குலாலா் தெருவில் உள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள் தொழில் கூடத்தில் வெள்ளிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு கைவினைப் பொருள்களை பாா்வையிட்டனா். பூம்புகாா் நிறுவனம் இந்தப் பொருள்களை வாங்கிக்கொண்டு பெண்கள் தொழில் தொடங்குவதற்கான கனிமங்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
