சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை: சிவகங்கையில் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து தனியாா்த் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லுாரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு இளைஞா்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில் 8-ஆம் வகுப்பு முதல் 10, 12 -ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு வரவேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவா்கள் இணைப்பில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
இதுமட்டுமன்றி, தனியாா்த் துறை வேலைவாய்ப்பு இணையதளத்திலும் வேலை தேடுபவா்கள், நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
