காரைக்குடியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாா், சங்கா்.
காரைக்குடியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாா், சங்கா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

காரைக்குடியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இருவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Published on

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இருவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்குடி பாப்பா ஊருணிப் பகுதியைச் சோ்ந்தவா் இந்திரா. இவா் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு கடையில் இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பதுபோல் நடித்து இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இது தொடா்பாக காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாரால் சிவகங்கை நகா் வாணியங்குடியைச் சோ்ந்த சங்கா் (எ) குட்டைசங்கா் (32), வைரம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (29 ) ஆகியோரை கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை காரைக்குடி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணைமுடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் சங்கா் (எ)குட்டைசங்கா், ராஜ்குமாா் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதித் துறை நடுவா் காா்மேக கண்ணன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராஜ்குமாா் என்பவா் திருப்பூா் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் பதிவான திருட்டு வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் தண்டனை பெற்று கோயம்புத்தூா் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com