பழனி செல்ல மாலை அணிந்த பக்தா்கள்

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தைப் பூசத்துக்காக பழனி முருகன் கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் செவ்வாய்க்கிழமை விரத மாலை அணிந்துகொண்டனா்.
Published on

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தைப் பூசத்துக்காக பழனி முருகன் கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் செவ்வாய்க்கிழமை விரத மாலை அணிந்துகொண்டனா்.

வருகிற 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழா விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பக்தா்கள் பாத யாத்திரையாக பழனிக்குச் சென்று தைப் பூசத் திருநாளில் முருகனை தரிசனம் செய்வா்.

இதற்காக, பக்தா்கள் மாா்கழி மாதம் முழுவதும் விரதத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை மாா்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் முருக பக்தா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களுக்குச் சென்று பூஜைகள் நடத்தி விரத மாலை அணிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com