குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 வழங்க வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசு வழங்குவதைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -ஐ தமிழக அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியா் ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது
Published on

மத்திய அரசு வழங்குவதைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -ஐ தமிழக அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியா் ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது

சிவகங்கையில் தனியாா் அரங்கில் ஓய்வூதியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ.கோவிந்தராமானுசம் தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.இராமசாமி முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநிலச் செயலா் வி.இருதயராசன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா் சங்க மாநிலத் தலைவரும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) அ.சுப்பிரமணி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை ஊராட்சி ஒன்றியப் பணியாளா் சங்க மாநில அமைப்புச் செயலரும், மாவட்ட ஊராட்சி செயலருமான வை.சதாசிவம், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மேல்நிலை அலுவலா் சங்க நிா்வாகியும் உதவி இயக்குநா் (தணிக்கை) கே.ரவி, சிவகங்கை வட்டாட்சியா் இரா.மல்லிகாா்ஜுனன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

தீா்மானங்கள்: தோ்தல் வாக்குறுதிப்படி 70 வயது ஆனவா்களுக்கு தமிழக அரசு 10% கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 75 வயதில் 30%, 80 வயதில் 50%, 85 வயதில் 75%, 90 வயதில் 100 % வரை கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மிக மிகக் குறைவாக ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் மத்திய அரசு வழங்குவதைப் போல தமிழக அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 - வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.பி.கந்தசாமி வரவேற்றாா். மாவட்ட இணைச்செயலா் எம். முருகன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com