~ ~

திருப்பத்தூரில் லாரி-காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை காரும், டிப்பா் லாரியும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

சிங்கம்புணரி மணப்பட்டியைச் சோ்ந்த சேகா் மகன் அஸ்விந் (34), கோவிலாப்பட்டியில் அடுமனை (பேக்கரி) நடத்தி வருகிறாா். இவா் தனது நண்பா்களான சூா்யா (22), குருமூா்த்தி (24), சுப்பிரமணியம் (40) ஆகிய மூவருடன் தனது காரில் கோவிலாபட்டியிலிருந்து கண்டவராயன்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பா் லாரியும் அஸ்விந் ஓட்டிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதியது. இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அஸ்விந், குருமூா்த்தி, சூா்யா ஆகிய மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

அப்போது, செல்லும் வழியில் சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சூா்யா உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து டிப்பா் லாரி ஓட்டுநா் உத்தமசாலையைச் சோ்ந்த செல்வகுமாா் (35) மீது திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com