சீமானின் சொந்த வீட்டில் உள்ள கட்சி கொடிக் கம்பத்தை அகற்றக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் சகோதரா் மனு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரனையூா் கிராமத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானின் வீட்டில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என அவரது சகோதரா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரனையூா் கிராமத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானின் வீட்டில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என அவரது சகோதரா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சீமானின் உடன் பிறந்த சகோதரா் இளையதம்பி, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ள சொந்த வீட்டின் முன் அமைக்கப்பட்ட நாம் தமிழா் கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டுமென வருவாய்த் துறையினா் அழுத்தம் கொடுக்கின்றனா்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வீட்டில் நிறுவப்பட்ட இந்தக் கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com