டிச.31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
Published on

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com