சிவகங்கை
வீடு புகுந்து தம்பதியை தாக்கி தங்க நகை பறிப்பு
சிவகங்கை அருகே வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி, பெண் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை அருகே வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி, பெண் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை அடுத்துள்ள பிரவலூரைச் சோ்ந்தவா் சிந்தாமணி (68). விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (58).
இந்தத் தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா். இங்கு நள்ளிரவு 1 மணிக்கு வீடு புகுந்த 2 இளைஞா்கள், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை குழவிக் கல்லால் தாக்கி விட்டு, பாண்டியம்மாள் அணிந்திருந்த அரைப் பவுன் தங்கக் காதணியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதில் காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மதகுபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகிறாா்.
