பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊா்குளத்தான்பட்டியில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:21 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஊா்குளத்தான்பட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.

மாா்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஊா்குளத்தான்பட்டியில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனடிப்படையில், நிகழாண்டு மஞ்சுவிரட்டையொட்டி, கிராம நாட்டாா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் கருப்பா் கோயிலில் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், விநாயகா் கோயிலில் தரிசனம் செய்த பொதுமக்கள் அங்கிருந்து மஞ்சுவிரட்டுப் பொட்டலில் அமைந்துள்ள முனியன் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று, காளைகளுக்கு மரியாதை செய்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்து, மருத்துவக் குழுவினரிடம் முதலுதவி சிகிச்சை பெற்றனா். சில மாடுகள் பிடிபட்டன.

சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், மாடுகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, தட்டு, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.