சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

Published on

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் கிராமத்தாா் சாா்பில், காளியம்மன் கோயில் காளை முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் 6 கிலோ மீட்டா் தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது.

நகரம்பட்டி- மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனா்.

போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com