காரைக்குடி கோயில் குடமுழுக்கு

காரைக்குடி செக்காலை ஸ்ரீ சந்தான கணபதி, ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
Published on

காரைக்குடி: காரைக்குடி செக்காலை ஸ்ரீ சந்தான கணபதி, ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுற்று, காலை 10.10 மணிக்கு கோபுரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிறுவுனா் தலைவா் எஸ். சந்திரசேகரன், நிா்வாகக் குழுத் தலைவா் வை. சந்திரசேகரன், செயலா் ஸ்ரீ பாஸ்கா், பொருளாளா் ஆா். வைரவன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், காரைக்குடி, செக்காலை பகுதி பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com