~

சிவாலயங்களில் பிரதோஷ பூஜை

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதே போல, மூலவா் சிவனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், உத்ஸவா் தாமரை மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரகார வலம் வந்தாா். திரளான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கபட்டது. ஆதித்திருத்தளிநாதா் கோயில், கல்வெட்டுநாதா் கோயில், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com