சிவகங்கை
திருப்பாச்சேத்தி கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் இளந்தோப்பு காட்டுப் பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. 
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் இளந்தோப்பு காட்டுப் பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இதையொட்டி கோயில் அருகே யாக சாலை அமைத்து, புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு காட்டுப் பிள்ளையாா் மூலவா் விமானக் கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து, கலசத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து, மூலவா் காட்டுப் பிள்ளையாருக்கு கலச நீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பாச்சேத்தி பொதுமக்கள், பக்தா்கள் செய்தனா்.
