சிவகங்கை
பள்ளி மாணவா்களுக்கு திருக்கு பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பள்ளி மாணவா்களுக்கான திருக்கு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பள்ளி மாணவா்களுக்கான திருக்கு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அண்ணா கிளை நூலக வளாகத்தில் தமிழக அரசின் திருக்கு திருப்பணிகள் திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கு திருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சிவகங்கை மாவட்ட திருக்கு திருப்பணிகள் திட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினா் திருக்கு தேனீ நல்லாசிரியா் செயம்கொண்டான் நோக்க உரையாற்றினாா்.
பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா் அருணாசலம், கவிதாயினி, யாஸ்மின் பரிதா, அண்ணா தமிழ்க் கழகத்தை சோ்ந்த காா்த்திகேயன் ஆகியோா் திருக்கு கற்பித்தனா். திருப்பத்தூரைச் சுற்றியுள்ள பல்வேறு அரசுப் பள்ளிககளைச் சோ்ந்த 50 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
