சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி
சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு வருகிற 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளிகள் தங்களது பதிவை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயற் குழு உறுப்பினா் சக்திவேலிடம் பதிவு செய்ய வேண்டும். கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகளின் அணிகள் நவ.10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் 1.9.2010 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7010361791 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா் தெரிவித்தனா்.
