கண்மாய்களில் மீன்பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்

Published on

சிவகங்கை மாவட்டம், அமராவதி புதூா், செஞ்சை நாட்டாா், சங்கராபுரம், பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட மீன்வளம், மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அமராவதி புதூா், செஞ்சை நாட்டாா், சங்கராபுரம், பாதரக்குடி ஆகிய 4 கண்மாய்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இணையதள முகவரி வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களைப் பெறலாம். இதுதொடா்பாக மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575 - 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அல்லது மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com