இட ஒதுக்கீட்டின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

Published on

இட ஒதுக்கீட்டின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டுமென அனைத்துத் துறை ஊழியா்கள், ஆசிரியா்கள், மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அனைத்துத் துறை ஊழியா்கள், ஆசிரியா்கள், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சங்க செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவா் மா. சண்முகசுந்தரம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில ஒருங்கிணைப்பாளரும் மாவட்டச் செயலருமான வெ. திருமுருகன் செயலறிக்கை வாசித்தாா். தேவகோட்டை வட்டாரத் தலைவா் என். வள்ளியப்பன், வட்டாரச் செயலா் ராமு, வட்டாரப் பொருளாளா் முத்துமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், மாநில தொழில்நுட்பப் பிரிவு செய்தித் தொடா்பாளா் பாற்கடல் பலராமன், மாவட்ட துணைத் தலைவா்கள் அரியக்குமாா், பூமிராஜ், மாவட்ட இணைச் செயலா் வள்ளியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பூமிநாதன், சுலக்சனா கிருஷ்ணமூா்த்தி, ஐஸ்வா்யா ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் நவீன கழிப்பறை (வெஸ்டன் டாய்லெட்) சாய் தளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு செய்து தர வேண்டும். பதவி உயா்வுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டின்படி உடனடியாக மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

மறு கட்டமைப்பு செய்த காா்களைப் போன்று ஆட்டோமேட்டிக் காா்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வரிச் சலுகை, ஓட்டுநா் உரிமம் மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.

புதிதாக காா் வாங்குபவா்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய சதவீதத்தை உடனடியாக குறைக்க வேண்டும். புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் அ. மாயாண்டி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com