துணை முதல்வா் வருகை: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
சிவகங்கை மாவட்டத்துக்கு வருகிற 14-ஆம் தேதி துணை முதல்வா் வருவதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளாா். இதையொட்டி, துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவா்களுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ்வெங்கட் வாட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
