பேருந்தில் பெண் பயணியிடம் பணம் திருட்டு: பெண்கள் இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்த்துக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரையிலிருந்து கமுதிக்கு சென்ற தனியாா் பேருந்தில் மதுரை பி.பி. குளம் ராஜாஜி நகரைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி ஆனந்தி (48) திருப்புவனத்துக்கு பயணம் செய்தாா். அப்போது இந்தப் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் இருவா் ஆனந்தி தனது பையில் வைத்திருந்த ரூ. 2.90 லட்சத்தை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டனா். இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் அந்த பெண்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் வட்டம், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அழகிரி மனைவி ரதி (41), வரதராஜன் மனைவி வசந்தி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்கள் திருடிய பணத்தை கைப்பற்றினா்.
