சிவகங்கை
இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஓய்வுபெற்ற தீயணைப்பு அலுவலா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலா் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகேயுள்ள வாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் நேரு (67). இவா் தீயணைப்பு அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.
இந்த நிலையில், வாகுடி கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு நேரு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பெரும்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் நேரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
