ஜெருசலேம் புனித பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு நிதியுதவி
ஜெருசலேம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.37,000- வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ.60,000-வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 1.11.2025 -ஆம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டதின் கீழ் விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
இதுமட்டுமன்றி
ஷ்ஷ்ஷ்.தீநீனீதீநீனீஷ்.ற்ஸீ.ரீஷீஸ்.வீஸீ
என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அடுத்தாண்டு பிப்.28-ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 -என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றாா் அவா்.
