இளையான்குடியில் நாய்கள் கடித்து 7 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

இளையான்குடி பேரூராட்சி பகுதியில் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வீதிகளில் நடமாடும் நிலை உள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை இளையான்குடியில் வாரச் சந்தை நடைபெற்றது.

அப்போது சந்தைக்கு பொருள்கள் வாங்க வந்திருந்த த சிங்கப்பாண்டி, முகமதுசேக், ஷேக் தாவூது, ஜாகிராபானு,  சிறுவன் முகமது ரபீக் உள்ளிட்ட 7 பேரை அங்கு சாலையில் சுற்றித் திருத்த தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. அவா்களுக்கு இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு நகரத் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெய்னாா் கூறியதாவது: இளையான்குடி பேரூராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி மண்டல இயக்குநா் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com