சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சில மாதங்களுக்கு முன்பு தொண்டி சாலையில் சமத்துவபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை தொல்நடைக் குழுவினா் சில மாதங்களுக்கு முன்பு தொண்டி சாலையில் சமத்துவபுரம் பகுதியில் 246 ஆண்டுகள் பழைமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனா்.
இந்தக் கல்வெட்டு ஒரு கல்லறைக் கல்வெட்டாகும். 1759 ஜூன் முதல் நாள் பிறந்து, 1779 ஜூலை 25- ஆம் தேதி உயிரிழந்த எலிசபெத் ஹெல்மா் என்ற திருமணமாகாத பெண்ணுக்காக வைக்கப்பட்டது இந்தக் கல்வெட்டு என்பது தெரியவந்தது.
இதை சிவகங்கையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியா் ஊத்திஸ்வரியிடம் சனிக்கிழமை தொல்நடைக் குழுவினா் ஒப்படைத்தனா்.
இந்த நிகழ்வில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநா் புலவா் கா. காளிராசா, தலைவா் நா. சுந்தரராஜன், செயலா் இரா. நரசிம்மன், செயற்குழு உறுப்பினா் வித்யா கணபதி, முன்னாள் காப்பாட்சியா் பக்கிரிசாமி, முன்னாள் கூட்டுறவு சாா்பதிவாளா் சுரேஷ்குமாா், முன்னாள் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஆறுமுகம், ரமேஷ் கண்ணா, இலக்கிய வடிவு, முத்துக்காமாட்சி, பாண்டி, ஆய்வாளா் காளீஸ்வரன், வழக்குரைஞா் சத்யன் ஆகியோா் கலந்து கொண்டனா்.