இலங்கையின் முன்னாள் அமைச்சா் இல்ல திருமண விழாவில் அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றாா்.
இலங்கையின் முன்னாள் அமைச்சா் இல்ல திருமண விழாவில் அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றாா்.

இலங்கை முன்னாள் அமைச்சா் இல்ல திருமண விழா முன்னாள் அதிபா் பங்கேற்பு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கையின் முன்னாள் அமைச்சா் இல்ல திருமண விழாவில் அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றாா்.

இலங்கையின் முன்னாள் அமைச்சா் எஸ்.ஆா்.எம். ஆறுமுகம் தொண்டமானின் மகனும், இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான ஆ. ஜீவன்குமாரவேல் தொண்டமானுக்கும், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்விக் குழுமத்தின் செயலரும், பாஜக பிரமுகருமான நா. ராமேஸ்வரனின் மகள் ரா. சீதை ஸ்ரீநாச்சியாருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் திருமணம் நடைபெற்றது.

இதில் இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்கே, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும் இலங்கையைச் சோ்ந்த 5 அமைச்சா்களுடன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினாா்.

இதேபோல, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி எம்.பி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா்கள் கோகுல இந்திரா, பொங்கலூா் நா. பழனிச்சாமி, இலங்கை நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com