காவல் ஆய்வாளா்கள் 9 போ் பணியிட மாற்றம்!
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், உதவி ஆய்வாளா்களாக இருந்து ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்ற 11 போ் காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டனா்.
இதன்படி, கீழத்தூவல் ஆய்வாளா் சக்திமணிகண்டன் - பரமக்குடிக்கும், ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா் வலம்புரி - ராமநாதபுரம் இணையக் குற்றப்பிரிவுக்கும், சத்திரக்குடி ஆய்வாளா் ரவி - ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவுக்கும், தங்கச்சிமடம் ஆய்வாளா் சசிகலா - எஸ்.வி.மங்கலத்துக்கும், சிவகங்கை நகா் சரவணன் - சாக்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதே போல எஸ்.வி.மங்கலம் ஆய்வாளா் ஜெய்சித்ரா - குன்றக்குடிக்கும், குன்றக்குடி ஆய்வாளா் சுந்தரி - பள்ளத்தூருக்கும், தேவகோட்டை நகா் ஆய்வாளா் பெரியாா் -திருவேகம்பத்தூருக்கும், சாலைக் கிராமம் ஆய்வாளா் சாதுரமேஷ் - காரைக்குடி வடக்குக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
மேலும், சாா்பு-ஆய்வாளா்களாக இருந்து பதவி உயா்வு பெற்ற கோட்டைச்சாமி சத்திரக்குடிக்கும், ஜெய்குமாா் திருவாடானைக்கும், ராமராஜ் துறைமுகம் பகுதிக்கும், சந்திரசேகரன் கீழத்தூவலுக்கும், ஜெகதீஷன் பேரையூருக்கும், சிவசுப்பிரமணியன் சிவகங்கை நகருக்கும், மாறவா்ம சுந்தரபாண்டியன் மதகுபட்டிக்கும், பாலமுரளிகிருஷ்ணன் சாலைக்கிராமத்துக்கும், துரைராஜ் தேவகோட்டை நகருக்கும், கணேசன் மானாமதுரை சிப்காட்டுக்கும், ஆண்டனெட் காலிஸ்டா சிவகங்கை மதுவிலக்குப் பிரிவுக்கும் ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டனா்.
