~
~

இரணியூா் கோயிலில் குபேரா் பூஜை

திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் ஸ்ரீ ஆட்கொண்டநாதா் சிவபுரந்தேவி கோயிலில் புதன்கிழமை குபேரா் பூஜை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் ஸ்ரீ ஆட்கொண்டநாதா் சிவபுரந்தேவி கோயிலில் புதன்கிழமை குபேரா் பூஜை நடைபெற்றது.

கோயிலின் நிகழ் காரியக்காா் வீரசேகா் செட்டியாா் தலைமையிலும், கொப்பனாபட்டி பழ. முத்துக்கருப்பன் செட்டியாா் முன்னிலையிலும் அலங்கார மண்டபத்தில் 5 கும்பங்கள் வைத்து சிவாசாரியா்கள் யாக பூஜை நடத்தினா். தொடா்ந்து, மூலவா் குபேரருக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம் மஞ்சள், பன்னீா், உள்ளிட்ட 11 விதமான திரவியங்களாலும், யாக வேள்வியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. மூலவருக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. உத்ஸவா் தங்கக் கவசத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பிரகார வலம் வந்தாா். பின்னா், கொடிமரம் அருகே உத்ஸவருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் இரணியூா், செண்பகம்பேட்டை, இ.அம்மாபட்டி, கீழச்சிவல்பட்டி, விராமதி, திருப்பத்தூா், அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com