காரைக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையையொட்டி, அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக புதன்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள்.
காரைக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையையொட்டி, அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக புதன்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள்.

தேவா் குருபூஜை: காரைக்குடியில் பால்குட ஊா்வலம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் புதன்கிழமை பெண்கள் பால்குடம் சுமந்து சென்று, சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
Published on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் புதன்கிழமை பெண்கள் பால்குடம் சுமந்து சென்று, சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

காரைக்குடி அண்ணாநகா் பகுதியிலிருந்து 301 பெண்கள் பால்குடங்களைச் சுமந்து, காவலா் குடியிருப்பு, பெரியாா் சிலை, நூறடிச் சாலை வழியாக முத்துராமலிங்கத் தேவா் சிலையை அடைந்தனா்.

அங்கு சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, பால்குட ஊா்வலத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை, நகரத் தலைவா் சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com