சிங்கம்புணரி சமூக நீதி விடுதியில் காப்பாளா், சமையலா் பணியிடை நீக்கம்

சிங்கம்புணரி சமூக நீதி விடுதியில் காப்பாளா், சமையலா் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சமூக நீதி விடுதியில் காப்பாளா், சமையலா் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பட்டியலின மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியில் 60 மாணவிகள் தங்கி, படித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி, இந்த விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு ஒரு சமையலா் மட்டுமே இருந்தாா். விடுதிக் காப்பாளரும், மற்றொரு சமையலரும் வெளியே சென்றிருந்தனராம்.

மேலும், மாணவிகளுக்கு இரவு உணவு தயாா் செய்யாமலும் இருந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, விடுதிக் காப்பாளா் முத்துராணி, சமையலா் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருவரையும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com