முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அரசு மகளிா் கல்லூரி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

சிவகங்கை அரசு மகளிா் கல்லூரி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மஜித் சாலை, குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்து முனியாண்டி ( 66). முன்னாள் ராணுவ வீரரான இவா்,சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், முத்து முனியாண்டி சிவகங்கை மகளிா் கல்லூரி அருகே உள்ள ஒரு மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com