ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி வங்கிகளுக்கு கொண்டு சென்ற ரூ. 5.47 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.47 கோடி பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:37 am IST

திருப்பத்தூரில் உரிய ஆவணங்களின்றி வங்கிகளுக்கு கொண்டு சென்ற ரூ. 5.47 கோடியை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக திருப்பத்தூா், தேவகோட்டை, ஆலங்குடி, மிளகனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கு, மதுரையிலிருந்து பணம் எடுத்து வந்த வாகனத்தை சோதனையிட்டனா். அப்போது, அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுக்கோட்டை, திருப்பத்தூா் வங்கிகளிலிருந்து பெற்று மதுரைக் கருவூலத்துக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.52 கோடியை பறிமுதல் செய்து திருப்பத்தூா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.