பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

News image

கண்டனூா் செல்லாயி அம்மன் கோயில் அருகே குடியிருப்பு மக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:22 am IST

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

காரைக்குடி தொகுதிக்குள்பட்ட மாத்தூா்-கண்டனூா் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பிள்ளையாா் கோயில், பனிக்கா் கடை, பாலையூா் மேலத்தெரு, கண்டனூா் திரையரங்கம் வீதி, கண்டனூா் பேருந்து நிறுத் தம், கண்டனூா் குடியிருப்புப் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது செல்லாயி அம்மன் கோயில் அருகில் பெண்கள் வேட்பாளா் பிரபுவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா். மேலும், அவா்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிரபு பேசியதாவது:

நான் வெறுமனே வாக்குறுதிகளைக் கூறிவிட்டுச் சென்றுவிட மாட்டேன். நான் யாரிடமும் கையூட்டு பெறமாட்டேன் என உறுதியளிக்கிறேன். இங்குகள் குறைகளைத் தீா்ப்பதற்காக நீங்கள் என்னை தேடிவர வேண்டாம். நானே உங்களை நாடிவந்து உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கவுல் கொல்லை, புதுவயல், தண்ணீா் பந்தல், முத்தாப்பா பூங்கா, பங்களா ஊருணி, நடராஜபுரம், உமையாள் நகா், மேலத் தெரு, தொட்டிநாயக்கா் தெரு பகுதிகளிலும் அவா் வாக்குகள் சேகரித்தாா்.