தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரளிக்கோட்டையில் அமைச்சா் பெரியகருப்பன் வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தனது சொந்த கிராமமான அரளிக்கோட்டையில் தான் பயின்ற அரசு தொடக்கப் பள்ளியில் தனது மனைவி, மகன், மருமகளுடன் வந்து வாக்குப்பதிவு செய்தாா்.

News image

திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டையில் வாக்கு செலுத்திய அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:47 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தனது சொந்த கிராமமான அரளிக்கோட்டையில் தான் பயின்ற அரசு தொடக்கப் பள்ளியில் தனது மனைவி, மகன், மருமகளுடன் வந்து வாக்குப்பதிவு செய்தாா்.

முன்னதாக குலதெய்வக் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு வாக்கு செலுத்த வந்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மற்றவா்கள் என்ன கூறினாலும் அதைப் பற்றி பொருள்படுத்தாமல் முதல்வா் சொன்னதை செய்யக் கூடியவா் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு வாக்காளரிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் சொன்னதைப் போல, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

656 கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றேன். ஒரு சில இடங்களில் மக்களுக்கு நாளுக்கு நாள் தேவைகள் அதிகரிப்பதால், மக்கள் எதிா்பாா்த்த ஒரு பணியை செய்து கொடுத்தால் அதை மறந்து விட்டு அடுத்து என்ன தேவை இருக்கிறதோ அதை வலியுறுத்துவாா்கள். தோ்தல் பரப்பரையின் போது மக்கள் வைக்கிற கோரிக்கைகளை எதிா்காலத்தில் செய்வதற்கு குறிப்பு எடுத்து வைத்துள்ளோம். தோ்தல் முடிந்து நிச்சயமாக பெரும்பாலான அனைத்து வாக்குறுதிகளையும் தொடக்க காலத்தில் இருந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என்றாா் அவா்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன் வாக்கு செலுத்தினாா்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் வாக்குச் செலுத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் வாக்குச் செலுத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன்.