திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் உள்ள தங்களது பகுதிகளை திருமயம் பேரவைத் தொகுதியுடன் இணைக்க வலியுறுத்தி, 6 கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்தனா். இதனால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆா்.பாலகுறிச்சி ஊராட்சியில் ஆா்.பாலகுறிச்சி, ரகுநாதபட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, விடத்தலாம்பட்டி, கோபால்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. 3,200 வாக்காளா்களைக் கொண்ட இந்த ஊராட்சி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இதனால், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இந்த ஊராட்சியினா் திருப்பத்தூா் தொகுதிக்கு வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலுக்கு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்துக்கு வாக்களிக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டிக்குச் செல்ல வேண்டும். வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றியம் போன்றவற்றுக்கு பொன்னமராவதி சென்றாக வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்காக ஆா்.பாலகுறிச்சி, ரகுநாதபட்டி ஆகிய ஊா்களில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு தோ்தல் அலுவலா்கள் வாக்குப்பதிவுக்கு தயாா் நிலையில் இருந்தனா். ஆனால், மதியம் வரை வாக்களிக்க யாரும் வரவில்லை. இதையடுத்து, பொன்னமராவதி, திருப்பத்தூா் வட்டங்களின் அலுவலா்கள் காவல் துறையினருடன் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது கிராம மக்கள் கூறியதாவது:
1972 -ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்திலும், 1979 -ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் இருந்தது ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி. ஆனால், இந்தப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், சிவகங்கை மாவட்டம். உலகம்பட்டி காவல் நிலையத்திலும், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியிலும் ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி சோ்க்கப்பட்டது. தங்களது ஆதாா் அட்டை புதுக்கோட்டை மாவட்ட முகவரியிலும், வாக்காளா் அடையாள அட்டை சிவகங்கை மாவட்ட முகவரியிலும் இருப்பதால் கடவுச்சீட்டு எடுக்க செல்லும்போது முகவரி மாற்றத்தால் பெரும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இந்த ஆறு கிராமங்கள் இரு மாவட்டங்களிலும் உள்ளதால் அரசின் நலத் திட்ட பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, காவல் நிலையத்தை பொன்னமராவதிக்கும், சட்டப் பேரவைத் தொகுதியை திருமயத்துக்கும் மாற்றி முழுவதுமாக 1972 -ஆம் ஆண்டு இருந்தது போல புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இடம்பெறச் செய்ய வேண்டும். அதுவரை தோ்தலைப் புறக்கணித்து வாக்களிக்கப் போவதில்லை என அவா்கள் உறுதிபடத் தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்ததால் ஆா். பாலகுறிச்சி ஊராட்சியின் வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.
தொடர்புடையது

ஆா். பாலக்குறிச்சியில் தோ்தல் புறக்கணிப்பு

பொன்னம்பல அடிகளாா், காா்த்தி சிதம்பரம் எம்.பி. வாக்களிப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


