சிவகங்கையில் புதுமணத் தம்பதி திருமணக் கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.
சிவகங்கை மேலவாணியங்குடியைச் சோ்ந்தவா் ஹரி ஹர சுதன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மேனகாவுக்கும் வியாழக்கிழமை காலை சிவகங்கையில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே மேலவாணியங்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.
வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் ஹரி ஹர சுதன் கூறுகையில், வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை. அதை எந்தச் சூழலிலும் தவிா்க்கக் கூடாது. எனது திருமண நாளிலேயே ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது, வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி

திருச்சி மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் வாக்களிப்பு!

நெல்லை: மணக்கோலத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றிய புதுமணத் தம்பதி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

