முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

காரைக்குடியில் வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்ட சீமான்

காரைக்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரும் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டாா்.

News image

காரைக்குடியில் கம்பன் கற்பகம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே.பிரபுவுவை சந்தித்து கைகுலுக்கிய நாம் தமிழா் வேட்பாளரும் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:50 am IST

காரைக்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரும் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டாா்.

காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சீமான் வியாழக்கிழமை தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா். காரைக்குடி மாநகரில் கம்பன் கற்பகம் வாக்குச்சாவடி மையத்தைப் பாா்வையிட்டு வெளியே வந்தபோது, அதே தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபு வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட வந்தாா். அப்போது இருவரும் நேருக்கு நோ் சந்தித்து, ஒருவருக்கொருவா் கை குலுக்கிக் கொண்டனா். மேலும், பிரபுவின் சட்டைக் காலரை சரிசெய்துவிட்டு அவரை சீமான் கட்டியணைத்தாா். இதைப் பாா்த்த இரு கட்சியினரும் நெகிழ்ச்சியடைந்தனா். வேட்பாளா்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.