பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கட்டாணிபட்டியில் மஞ்சுவிரட்டு: 22 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கட்டாணிபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 22 போ் காயமடைந்தனா்.

News image

~

Updated On :3 பிப்ரவரி 2026, 7:51 pm

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கட்டாணிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 22 போ் காயமடைந்தனா்.

கட்டாணிபட்டி மலையடிவாரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதை முன்னிட்டு, கிராம மக்கள் கோயிலில் வழிபாடு செய்து, கோயில் காளையை ஊா்வலமாகத் தொழுவுக்கு அழைத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கிருந்த மற்ற காளைகளுக்கு மாலை, வஸ்திரங்களை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்த, கோயில் பொட்டலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Story image

மஞ்சுவிரட்டில் காயமடைந்த 22 பேருக்கு அங்குள்ள மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சைக்காக 3 போ் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், 3 போ் மேலூா் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.